அதிபரான பின் டொனால்டு ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்து! | Trump"s first sign to introduce new insurance scheme in US

வெளியிடப்பட்ட நேரம்: 05:03 (22/01/2017)

கடைசி தொடர்பு:05:03 (22/01/2017)

அதிபரான பின் டொனால்டு ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்து!

டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் தனது முதல் கையெழுத்தாக முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

ட்ரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில், "ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம். புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். முன்னதாக, அவர் பதவி ஏற்றதும் ஆற்றிய உரையில், "கடந்த சில ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியேறிய தொழிலகங்களை மீண்டும் அமெரிக்காவில் செயல்படச் செய்யும் விதமாக தொழிலக கொள்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வாஷிங்டனில் உள்ள சிலரின் கைகளில் மட்டுமே அதிகாரம் குவிந்திருந்தது. ஆனால் எனது ஆட்சியில் அதிகாரம் சாதாரண மக்கள் கையில் இருக்கும். அமைதியும் வளமும் மிக்க நான்கு ஆண்டு கால ஆட்சியை நான் அளிப்பேன்" என்று உறுதி அளித்திருந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க