லண்டனில் செல்ஃபி கண்காட்சி...

Obama Selfie

லண்டனில் உள்ள சாட்சி கேலரியில் (Saatchi gallery) செல்ஃபிகளுக்கென்றே ஒரு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. செல்ஃபிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் செல்ஃபியும் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் மார்ச் முதல் இந்த செல்ஃபி கண்காட்சி தொடங்கப்படும். இதில், மிகவும் புகழ்பெற்ற செல்ஃபிக்கள் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் முக்கிய கவனம் பெற்ற செல்ஃபிக்கள் இடம்பெறும்.

அதேபோல, #SaatchieSelfie என்ற செல்ஃபி போட்டியையும், சாட்சி கேலரி அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த போட்டிக்கு செல்ஃபிக்கள் அனுப்புபவர்களின் புகைப்படங்களில் சிறந்தவை கண்காட்சியில் வைக்கப்படும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!