ஒபாமாவை ஃபாலோ செய்தால் ட்ரம்ப்பையும் ஃபாலோ செய்கிறதா ட்விட்டர்?

ட்விட்டர்

நமது ஊரில் சட்டசபை தேர்தலின் போது கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை நிகழ்த்தியே காட்டியிருக்கிறது ட்விட்டர். ஒரு கட்சிக்கு ஓட்டுப்போட்டால் அடுத்தக் கட்சிக்கு ஓட்டு விழுகிறது எனக் கூறும் விஷயம் தான் அது.  நீங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை தொடராமல் இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் ட்விட்டர் கணக்கு ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ அதிபருக்கான ட்விட்டர் கணக்கை நீங்கள் தொடர்ந்திருப்பதாக காட்டும். இந்தத் தவறு எப்படி நடந்தது என்று கூறி இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

என்ன தவறு?

ஜனவரி 20 தேதி வரை அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @POTUS பக்கத்தை ஒபாமா தான் வைத்திருந்தார். ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவருக்கு @POTUS கணக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்த 352 ட்விட்களுடன் ஒபாமாவுக்கு @POTUS44 என்ற கணக்கு வழங்கப்பட்டது. இதுவரை நடந்தது எல்லாம் சரியாக தான் நடந்தது. ஆனால் இந்த கணக்குகளை நண்பகல் 12 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) மாற்றியுள்ளது. அதில் இரண்டு பெரிய தவறுகளை ட்விட்டர் செய்துள்ளது. 

1. 12 மணிக்கு மேல் @POTUS44 கணக்கான ஒபாமாவின் கணக்கை தொடர்ந்தவர்கள் தானாக @POTUS ட்ரம்ப்பின் கணக்கையும் தொடர்ந்ததாக மாற்றியுள்ளது ட்விட்டர்.

2. @POTUS ட்விட்டர் கணக்கை அன் ஃபாலோ  செய்தவர்களை மீண்டும் தானாக @POTUS கணக்கை தொடர வைத்துள்ளது.

இந்த இரண்டுத் தவறுகளும் 560000 பேரின் கணக்குகளை பாதித்துள்ளது. இது போன்ற மாறுதல்கள் நடக்கும் போது ட்விட்டர் இதனை மிகவும் கவனமாக கையாளும். ஆனால் இந்தத் தவறு மன்னிக்கத்தக்கது அல்ல. இந்தத் தவறை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம் என அதன் சிஇஓ ஜாக் டோர்ஸே தெரிவித்துள்ளார். மேலும் இது விரைவில் சரிசெய்யப்படும் என்று கூறி சரியும் செய்துள்ளது ட்விட்டர்.

 

இது மட்டுமின்றி பல்வேறு கணக்குகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் இங்கே:

ஒபாமா ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கீழ்கண்ட கணக்குகளை தேசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் நிர்வாகம் செய்யும் அமைப்பு மாற்றியமைத்துள்ளது.

ஒபாமா:

@POTUS -  @POTUS44
​Facebook.com/POTUS -  Facebook.com/POTUS44
Medium.com/@PresidentObama -  Medium.com/@POTUS44

துணை அதிபர் பிடேன்

@VP on Twitter - at @VP44
​Facebook.com/VicePresidentBiden - Facebook.com/VicePresidentBiden44
​Instagram.com/VP -  Instagram.com/VP44
​Medium.com/@VPOTUS44 - Medium.com/@VPOTUS44

மிச்சேல் ஒபாமா:

@FLOTUS on Twitter -@FLOTUS44
​@MichelleObama on Instagram -@MichelleObama44
​Medium.com/@FLOTUS -@FLOTUS44

வெள்ளை மாளிகை கணக்குகள்:

@WhiteHouse on Twitter - @ObamaWhiteHouse
Facebook.com/WhiteHouse - Facebook.com/ObamaWhiteHouse
Instagram.com/WhiteHouse - Instagram.com/ObamaWhiteHouse
@LaCasaBlanca on Twitter - @LaCasaBlanca44
Facebook.com/whitehouse.espanol - Facebook.com/LaCasaBlancaObama
​Medium.com/WhiteHouse - Medium.com/@ObamaWhiteHouse
Flickr.com/WhiteHouse - Flickr.com/ObamaWhiteHouse
YouTube.com/WhiteHouse - YouTube.com/ObamaWhiteHouse
​Tumblr.com/WhiteHouse - Obamaobamawhitehouse.tumblr.com
@ONDCP - @ONDCP44
@ONDCPespanol - @ONDCPespanol44
​@OMBPress - @OMBPress44
@WhiteHouseOSTP - @WHOSTP44
@WhiteHouseCEQ - @WhiteHouseCEQ44
@OpenGov - @OpenGov44
@USCTO - @USCTO44
@CEAChair - @CEAChair44
​@WHWeb - @WHWeb44

ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!