வெளியிடப்பட்ட நேரம்: 04:21 (25/01/2017)

கடைசி தொடர்பு:02:52 (25/01/2017)

வெளியானது ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியல்!!

ஆஸ்கர்

89வது அகாடமி விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடக்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்க நாட்டுப் படமான 'லா லா லேண்ட்' திரைப்படம் சிறந்த அப்படம் உட்பட 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'லயன்' படத்தில் நடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகர் தேவ் பட்டேல் சிறந்த துணை நடிகருக்கான ஐந்து பேர் கொண்ட பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஒரு பயணத்தின் போது தனது பெற்றோரால் தொலைக்கப்படும் தேவ் பட்டேல் கூகுள் மேப்பை பயன்படுத்தி இந்தியாவிலுள்ள தனது கிராமத்தை தேடிவந்து தனது தாயை கண்டுபிடிப்பது தான் 'லயன்' படத்தின் ஒன் லைன். 'பீலே' படத்தின் இசைக்காக மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில் இந்த வருடம் நம் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் இந்தப் பட்டியலில் மிஸ்ஸிங்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்