மோடிக்கு ரஷ்ய அதிபரின் குடியரசுதின வாழ்த்து!

இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்துக் கூறியுள்ளார்.

புதினின் வாழ்த்து செய்தியில், 'எனது மனமார்ந்த இந்தியக் குடியரசு தின விழா வாழ்த்துக்களை ஏற்றுகொள்ளுங்கள். சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உங்களுடைய தேசம் ஆக்கப்பூர்வமாக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவுடனான ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைகளில் நிலவும் சிறப்பான ஒத்துழைப்பிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!