Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப்பின் முடிவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

சிரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வருபவர்களை  அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். குறிப்பாக அகதிகளை அனுமதிப்பதற்கு அவர் தடை விதித்திருந்தார். இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து அங்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பிறகு, இந்தநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Donald Trump

இதைத்தொடர்ந்து  இதுதொடர்பாக சில அமைப்புகள்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது, ட்ரம்ப்பின் முடிவுக்கு தற்காலிக தடை விதித்து, அமெரிக்கா நுழைபவர்களை விசாவுடன் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement