ஏஞ்சலினா-பிராட் விவாகரத்து விவகாரம் முடிவு என்ன ?

நடிப்பைத் தாண்டி சமூக நலனில் அக்கறை செலுத்தி ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த சர்வதேச லேடி சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி. பிரபல ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி-  பிராட் பிட் இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர், 2014-ம் ஆண்டு திருமணம் முடித்து ஒன்றாக 12 வருடங்கள் இருந்துள்ளனர். 'பிராட் பிட் அதிகமாகக் குடிக்கிறார். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். எனவே தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்' என ஏஞ்ஜலினா கடந்த செப்டம்பர் மாதம் கூறி இருந்தார். விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளைத் தன்னிடமே ஒப்படைக்குமாறு ஏஞ்சலினா கேட்டுக்கொண்டிருந்தார்.


 

ஏஞ்சலினா, பிராட் பிட் ஜோடிக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில் மூவர் கம்போடியா, எத்தியோப்பியா மற்றும் வியட்நாமில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள். ஏஞ்சலினாவின் குற்றச்சாட்டை அடுத்து பிராட், குழந்தைகளைத் துன்புறுத்தி இருக்க வய்ப்புள்ளதா என அதிகாரிகள் சோதனை இட்டனர். பின்னர் அந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை. விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும் நிலையில்,  நீதிமன்றம் ஆறு குழந்தைகளையும் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து பார்த்துக்கொள்ள உத்தரவிட வாய்ப்புகள் அதிகம் என பிராட் பிட்டின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எப்படியோ இந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தால் நல்லதுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!