கோரவிபத்தில் சிக்கி மூன்று நாட்கள் உயிர் வாழ்ந்த நபர் !

ன்டர் கிட்டில் என்ற 24 வயது நபர், தனது காரை மவுன்ட் பால்டி என்னும் மலையில் செலுத்திக் கொண்டிருக்கும்போது திடீரென்று கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் கண்ணாடி உடைத்துக் கொண்டு தலைகுப்புற விழுந்த ஹன்டர், காருக்கடியில் சிக்கலாக வெளியேற முடியாதபடி மாட்டிக்கொண்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மூன்று நாட்கள், அவர் காட்டுக்கூச்சல் போட்டும் யாரும் வரவில்லை. பின்னர், அந்தப்பக்கம் ரோந்துக்கு வந்த அமெரிக்க காவல் படையினர், ஹன்டரை மீட்டு, மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர்.

விபத்தில் அவருக்கு கபால எலும்பு, மார்பு எலும்பு ஆகியவை நொறுங்கின. நுரையீரல் பாதிக்கப்பட்டது. கால் எலும்பு உடைந்துள்ளது. இந்த நிலையில் ஒருவர் ஒரு மணி நேரத்துக்கு மேல் உயிர் வாழ்வது அதிசயம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால் ஹன்டர் சாப்பாடு, தண்ணீர், முதலுதவி எதுவும் இல்லாமல் 3 நாட்கள் உயிர் வாழ்ந்தது ஆச்சர்யம் அளிக்கிறது எனக் கூறினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!