வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (01/02/2017)

கடைசி தொடர்பு:16:14 (01/02/2017)

கடைசி காலாண்டில் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!

Apple

2016-ன் கடைசி காலாண்டில், ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிறுவனப்  பொருட்களை விற்றுள்ளது. கடைசி காலாண்டில் மட்டும்  78.3 மில்லியன் ஐபோன்களை விற்றுள்ளது. அதே காலகட்டத்தில், அந்நிறுவனம் 78.4 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. 

ஐபோன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் மேக் லேப்டாப், ஆப்பிள் வாட்ச் போன்ற பொருட்களும் கடந்த காலாண்டில் வரலாறு காணாத அளவுக்கு விற்றுள்ளது. 2017-ன் முதல் மூன்று காலாண்டுகளில் ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், கடைசி காலாண்டில் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக், 'இந்திய அளவிலும் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி காலாண்டு விற்பனை வரலாறு காணாத அளவுக்கு இருந்தது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ரீடெய்ல் கடைகள் திறப்பது பற்றியும், கணிசமான அளவு முதலீடு செய்வதுபற்றியும் விவாதித்துவருகிறோம்.' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க