உச்சம் தொட்ட ஃபேஸ்புக் லாபம்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் 3.57 பில்லியன் டாலர் (சுமாராக 23,919 கோடி ரூபாய்) சம்பாதித்திருக்கிறது.  2015-ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டில் சம்பாதித்த 1.56 பில்லியன் டாலர் லாபத்தை விட சுமாராக 229 சதவிகிதம் அதிகம். 2016 டிசம்பர் நிலவரப்படி ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 186 கோடி பேராக அதிகரித்திருக்கிறது. இது கடந்த 2015 டிசம்பர் நிலவரத்தை விட 17 சதவிகிதம் உயர்வு.

சன் டிரஸ்ட் நிறுவன அன்லிஸ்ட் ராட்னி ஹல்லின் கணிப்பு படி ஒரு நிறுவனம் விளம்பரத்துக்காக ஒதுக்கும் தொகையில், சராசரியாக 6.5 சதவிகிதத்தை மட்டுமே சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய பயன்படுத்துவதாக கணித்திருக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் 84 சதவிகித வருவாய் வெறும் மொபைல் விளம்பரங்கள் இருந்து மட்டுமே வந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஃபேஸ்புக்கின் விளம்பர வருமானத்தால் தான் வளர்ச்சி கண்டு வருவதாக அமெரிக்க அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்துக்கு 2016 டிசம்பர் காலாண்டின் வருவாயாக 8.81 பில்லியன் டாலர் (சுமாராக 59,027 கோடி ரூபாய்) ஈட்டிருக்கிறது.  இந்த வருவாய் தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனத்தின் 8.51 பில்லியன் டாலர் என்கிற கணிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பு : ஒரு டாலருக்கு 67 ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!