கண்ணீர் வரவழைக்கும் 'டவுன் சிண்ட்ரோம்' விளம்பரம்!

வுன் சிண்ட்ரோம், கொடுமையான மரபணு சார்ந்த நோய். இதனால் பாதிக்கப்படுபவர், ஐ.க்யு அளவு குறைந்து, காணப்படுவர். இவர்களை எளிதில் நோய்கள், தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இவர்கள் சராசரியாக 45 வயதுவரைதான் வாழ்வார்கள். இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பால குழந்தைகள் வளர்ப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமீபகாலமாக கருவிலேயே கலைக்கின்றனர்.  இவ்வாறு செய்வது தவறு என விளக்கும் வகையில் உணர்ச்சிபூர்வமாக ஒரு விளம்பரம், பிரான்ஸ் நாட்டில் தயாரித்து வெளியிடப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 'எங்களைக் கருவிலேயே கலைத்துவிடாதே அம்மா' என அவர்கள் தங்களது தாய்மார்களிடம் கூறுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விளம்பரம், டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கருவைக் கலைத்த தாய்மார்கள் பார்க்க நேர்ந்தால், மனதளவில் பாதிக்கப்படுவர் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!