Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

12 வயது சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட கத்தி!

மீபகாலமாக பிரிட்டனில் குற்ற சம்பவங்கள் அதிரித்து வருகின்றன. லண்டனில்  பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுவன், தனது நண்பர்களிடம் காண்பிக்க 7 இன்ச் நீளமுள்ள ஆபத்தான கத்தியை பள்ளிக்குக் கொண்டுவந்துள்ளான். இதனை அறிந்த போலீசார் சிறுவனிடம் இருந்து கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கத்தி வன்முறை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  2015-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2016-ம் ஆண்டு பதினோரு சதவிகிதம் அதிக கத்திக் கொலைகள் நடந்துள்ளன.  30,858 க்கும் அதிகமான கத்திக் கொலைகள் கடந்த ஆண்டு நடைபெற்றுள்ளன.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெக் டொனல்டு கடையின் வெளியில் 14 வயது சிறுவன் ஒருவன் 15 வயது சிறுவனால் கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினான். இதுபோன்ற சிறுவர் குற்றங்களைத் தடுக்க அரசு தீவிர நடடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close