'பெண்கள் போல நடந்து கொள்ளுங்கள்!'- ட்ரம்பின் அதிரடி உத்தரவு | Dress up like a woman - Trump's new order

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (04/02/2017)

கடைசி தொடர்பு:18:45 (04/02/2017)

'பெண்கள் போல நடந்து கொள்ளுங்கள்!'- ட்ரம்பின் அதிரடி உத்தரவு

ட்ரம்ப்-உத்தரவு

திரடி உத்தரவுகளுக்குச் சொந்தக்காரர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு பலரின் வெறுப்புகளையும் சம்பாதிப்பவர், மறுபுறம் H1b விசாவை இறுக்கிப்பிடித்து ஒட்டுமொத்த பிறநாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வியாழன் அன்று ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ட்ரம்ப். அதில் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வெள்ளை மாளிகைக்கு வேலைக்கு வரும் அனைத்து ஊழியர்களும் சிறப்பான ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், புறத் தோற்றத்தையும் பொலிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆண்கள் கழுத்தில் கண்டிப்பாக 'டை' கட்டியிருக்கவேண்டும். அதேபோல பெண்களும், 'பெண்களைப் போல' ஆடை அணிந்திருக்கவேண்டும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜீன்ஸ் அணிய பெண்களுக்கு தடை விதிக்காவிட்டாலும். அவர்கள் அணியும் ஜீன்ஸ் உடை, எந்த விதத்திலும் தோற்றத்தை பாதிக்காதவண்ணம் இருக்கவேண்டும். பார்ப்பதற்கு கண்ணியமாக இருக்கவேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடை கட்டுப்பாடுகள் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு , மட்டுமல்லாமல் அதிபரின் பிரதிநிதியாக அதிகாரிகள் கலந்து கொள்ளப் போகும் அத்தனை இடங்களிலும் இந்த ஆடைக்கட்டுப்பாடு பொருந்தும் என்கிறது உத்தரவு. இதனால் அதிகாரிகளும், ஊழியர்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள்.  ஆனால் அதிபர் ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் அதிரடி ஆடைக்கட்டுப்பாட்டு உத்தரவால் பொங்கியெழுந்த பெண் அதிகாரி ஒருவர் பிபிசிக்கு கொடுத்த பேட்டியில் 'நாங்கள் பெண்ணாக நடந்து கொள்கிறோம்... நீங்களும் பிரசிடன்டாக நடந்து கொண்டால்" என்று நச் கமெண்ட் கொடுத்திருக்கிறார். ஆனால் ட்ரம்ப் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற ஆள் இல்லை.

இந்த விதிமுறைகள் அதிபரின் மனைவியும், அமெரிக்காவின் பர்ஸ்ட் லேடியுமான மெலனியாவுக்கு பொருந்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க நடத்துங்க ட்ரம்ப்!


- என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close