வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (05/02/2017)

கடைசி தொடர்பு:09:48 (05/02/2017)

அமெரிக்க ஜனாதிபதியின் தடைக்கு எதிராக தீர்ப்பு... நீதிபதியை சாடும் ட்ரம்ப்!

Trump

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு வாரத்திற்கு முன்பு 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. 'நீதிபதியின் இந்த தீர்ப்பினால், மிக ஆபத்தானவர்கள் நாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இது மிக மோசமான முடிவு.' என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், 'நீதிபதியால் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்ட நடைமுறையை மீறுவது போல் உள்ளது. இந்தத் தீர்ப்பு சீக்கிரமே மாறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றும் ட்வீட்டர் மூலம் கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க