ட்ரம்ப் உத்தரவு - 'அலிபாபா' தலைவர் அதிருப்தி

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'அலிபாபா' நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, அந்நிறுவனத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான தலைமையகத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் அப்போது, 'வர்த்தகப் போர் குறித்து அனைவரும் கவலை அடைந்துள்ளனர். வர்த்தகம் நின்றால், போர் தொடங்கும். ஆனால் கவலைப்படுவது மட்டும் பிரச்னையைத் தீர்க்காது. ட்ரான்ஸ்-பசிபிக் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது, சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடவைத் தரும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தை மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். உலகத்திற்கு உலகமாக்கல் அவசியம்' எனத் தெரிவித்துள்ளார்.

ஜாக் மா

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும், அவரைச் சந்தித்த ஜாக் மா 'அமெரிக்காவில் பத்து லட்சம் எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அலிபாபா நிறுவனம் உதவி செய்யும்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பின் அமெரிக்காவில் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உலகமையமாக்கல் தான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த ஜாக் மா, ‘அமெரிக்க வேலை வாய்ப்புகளை பிற நாடுகள் திருடிக் கொள்ளவில்லை. முறையற்ற நிதி விநியோகம், அமெரிக்க இராணுவ செலவுகள் இவை தான் அமெரிக்க பொருளாதார சரிவுக்கும், வேலை வாய்ப்பு குறைந்து வருவதற்கும் காரணம்’, எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜாக் மா மீண்டும் ட்ரம்ப் குறித்து மீண்டும் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!