அமெரிக்காவில் நீதிமன்ற உத்தரவால் உயிர்பிழைத்த ஈரானியக் குழந்தை! #TrumpTravelBan

ஃபாத்திமா ரெசாத்

சிரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்று அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக சில அமைப்புகள்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அப்போது, ட்ரம்ப்பின் முடிவுக்கு தற்காலிகத் தடை விதித்து, அமெரிக்காவில் நுழைபவர்களை விசாவுடன் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

ஈரானைச் சேர்ந்த ஃபாத்திமா ரெசாத் என்ற குழந்தையின் பெற்றோர் கடந்த வாரம் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குள் நுழைய விசா அனுமதி கேட்டு, அது மறுக்கப்பட்டிருந்தது. ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஃபாத்திமா ரெசாத்தின் குடும்பத்திற்கு விசா அனுமதி கிடைத்து தற்போது குழந்தை ஓரிகன் மாகாணத்தின் போர்ட்லேண்ட் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சில பரிசோதனைகள் முடிந்த பிறகு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!