வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு!

Snowfall US

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மைனஸ் 2 டிகிரிக்கு குளிர் பதிவாகியுள்ளது.  

குறிப்பாக நியூயார்க்கில் 12 இன்ச் அளவுக்கு சாலையில் பனி படர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு 2,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாஸ்டனில் 18 இன்ச் அளவுக்கு பனி படர்ந்துள்ளது. பனிப்பொழிவால் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1960 மற்றும் 70 ஆண்டுகளில் மிகவும் அதிகப் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!