ஃபேஸ்புக்கைத் திட்டித்தீர்த்த மிராண்டா கெர்!

மிராண்டா கெர்

உலகப் புகழ்பெற்ற 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தை கடந்த 2012-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. கடந்த ஆண்டு 'இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்' என்ற வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த வசதியானது மற்றொரு புகழ்பெற்ற 'ஸ்னாப்சாட்' அப்ளிகேசனின் பல்வேறு வசதிகள் மற்றும் வடிவமைப்பை ஒத்திருந்தது. இது பயனர்கள் மட்டுமன்றி டெக் உலகத்தைச் சேர்ந்த பலரின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற மாடலான மிராண்டா கெர் "மற்றொருவரை நேரடியாக காப்பி செய்வது, புதுமை என்றாகிவிடாது. எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. இது அவமானப்பட வேண்டிய விஷயம். எப்படி அவர்களால் (ஃபேஸ்புக் நிறுவனம்) இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது?" என்றெல்லாம் திட்டித்தீர்த்திருக்கிறார். இந்த கோபத்திற்குக் காரணம்... 'ஸ்னாப்சாட்' நிறுவனத்தின் தலைவரும், இணை உரிமையாளருமான இவான் ஸ்பீகலை விரைவில் மணக்கவிருக்கிறார் மிராண்டா கெர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!