வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (10/02/2017)

கடைசி தொடர்பு:10:33 (10/02/2017)

விரைவில் ஈஃபிள் டவரைச் சுற்றி கண்ணாடிச் சுவர்

ஈஃபில் கோபுரம்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரம் உலகப் பிரசித்தி பெற்றது. 2015-ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, ஈஃபில் கோபுரத்திற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு இந்நகரில் நடந்த ஈரோ கால்பந்துப் போட்டிகளின் போது, ஈஃபில் கோபுரத்தைச் சுற்றி உலோக வேலிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, ஏற்கெனவே இருக்கும் உலோக வேலிகள் அகற்றப்பட்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் வலிமையான கண்ணாடிச் சுவர் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடிச் சுவர் அமைக்க உத்தேசமாக 20 மில்லியன் ஈரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க