Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அத்துமீறிய வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை!

north korea

டகொரியா பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி  தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தடையை மீறி வடக்கு பியோங்கன் பிராந்திய 'பங்க்யான்' ஏவுதளத்தில் இருந்து கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை,  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்துள்ளதாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையானது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை வடகொரியா நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜப்பானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement