இந்தியர் சந்தீப் தாஸுக்கு கிராமி விருது - அடெல் க்ளீன் ஸ்வீப்! #GRAMMYs | Sandeep Das wins Grammy with Yo Yo Ma #GRAMMYs

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (13/02/2017)

கடைசி தொடர்பு:11:01 (13/02/2017)

இந்தியர் சந்தீப் தாஸுக்கு கிராமி விருது - அடெல் க்ளீன் ஸ்வீப்! #GRAMMYs

உலகப் புகழ் பெற்ற செல்லோ இசைக்கலைஞர் யோ-யோ மா உருவாக்கிய 'The Silk Road Ensemble - Sing Me Home'க்கு 'சிறந்த உலக இசை' பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. இந்த ஆல்பத்தில் இந்திய தபேலா இசைக்கலைஞர் சந்தீப் தாஸும் பங்கேற்றிருப்பதால், அவரும் இந்த கிராமி விருதை யோ-யோ மாவுடன் பகிர்ந்துகொள்கிறார். 

Sandeep Das with Grammy Award

 

இசை உலகின் உயரிய விருதான 2017 கிராமி விருது விழாவில் அடெல்லின் 'ஹலோ' பாடல், இந்த ஆண்டுக்கான சிறந்த ரெக்கார்டாகவும், சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலம் சென்ற டேவிட் போயின் 'பிளாக்ஸ்டார்' சிறந்த ராக் பாடல் விருதை வென்றது. சிறந்த பாப் ஆல்பமும் அடெல்லின் '25' ஆல்பமுக்குத்தான். உலகிலேயே ரெக்கார்டு ஆஃப் தி இயர், ஆல்பம் ஆஃப் தி இயர், சாங் ஆஃப் தி இயர் ஆகிய கிராமி விருதுகளை இரண்டு முறை பெற்ற ஒரே இசைக்கலைஞர் அடெல்தான். 

சிறந்த ராப் ஆல்பத்துக்கான கிராமி விருதை சான்ஸ் தி ராப்பரின் 'கலரிங் புக்' வென்றது. சிறந்த பாப் குழு பெர்ஃபாமென்ஸுக்கான கிராமி விருதை 'ஸ்ட்ரெஸ்ட் அவுட்' பாடலுக்காக ட்வென்ட்டி ஒன் பைலட்ஸ் குழு பெற்றது. சிறந்த புதிய கலைஞருக்கான கிராமி விருதை சான்ஸ் தி ராப்பர் தட்டிச் சென்றார். சிறந்த டான்ஸ் ரெக்கார்டிங்குக்கான விருதை 'டோன்ட் லெட் மீ டவுன்' பாடலுக்காக தி செயின்ஸ்மோக்கர்ஸ் பெற்றார்கள். சிறந்த மியூஸிக் வீடியோவுக்கான கிராமி விருதை பியான்ஸேவின் பிரபலமான 'ஃபார்மேஷன்' வீடியோ வென்றது. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க