வெளியிடப்பட்ட நேரம்: 05:36 (14/02/2017)

கடைசி தொடர்பு:12:11 (14/02/2017)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும்: வடகொரியா ஏவுகணை எதிரொலி

கடந்த ஞாயிறன்று கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ‘புக்குக்சோங்-2’ எனும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றன. மேலும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியாவை மிரட்டும் வகையில் எல்லையில் படைகளைக் குவித்து வருகிறார். இதன் காரணமாக தென்கொரியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அமெரிக்காவுக்கும், அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கும் விதமாக அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி வாதிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க