Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட கொரிய அதிபரின் நெருங்கிய உறவினர் மலேசியாவில் கொலை!

Kim Jung Num

வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong-un) ஒன்றுவிட்ட சகோதரர்(half-brother) கிம் ஜோங் நம் (Kim Jong Nam) மலேசியாவில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோங் நம், மலேசியாவில் திங்கட்கிழமை கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஜோங் நம்-ஐ வட கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலேசியாவின் போலீஸோ வட கொரியாவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஒரு நபர், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வட கொரியாவிடம் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Kim Jong Un
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement