வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (18/02/2017)

கடைசி தொடர்பு:08:58 (18/02/2017)

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு கடைசி இடம்!

அமெரிக்காவில் புதியதாக ஒரு அதிபர் பதவி ஏற்றவுடன், அவருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு மற்றும் அவரது செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம். புதிதாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் குறித்து அமெரிக்க மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் இணைந்து நடத்தியது. அதில், 53% பேர் ட்ரம்பின் செயல்பாடுகள் வரவேற்கக்கூடியதாக இல்லை என்றும், 44% பேர் செயல்பாடுகள் சரியாக உள்ளது எனவும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். எனவே, இந்த கருத்துக்கணிப்பில் முன்பிருந்த அமெரிக்க அதிபர்களைவிட செல்வாக்கில் கடைசி இடத்தில் இருக்கிறார், டிரம்ப்.  ஒபாமா பதவியேற்றபோது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பராக் ஒபாமா மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க