வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (21/02/2017)

கடைசி தொடர்பு:11:38 (21/02/2017)

''லெட்டர்ல எவ்ளோ மிஸ்டேக்ஸ்''- முன்னாள் காதலியை ட்விட்டரில் கலாய்த்த காதலன்!

அந்நியன் படத்துல மார்ஜின் போட்டு லவ் லெட்டர் எழுதுன அம்பியைக்கூட மன்னிச்சு விட்டுடலாம். ஆனா, இந்தப் பையன் பண்ணிருக்கிறத பாத்தா, என்ன சொல்லுறதுனே தெரியல. முன்னாள் காதலி, இவருக்கு காதலை விட்டுப்  பிரிந்துசென்றதற்காக மிகப்பெரிய கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தைப் படித்த காதலன் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

நிக் லட்ஸுக்கு அவரது காதலி 4 பக்கங்கள்கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் படித்துக் காதலில் உருகாமல், நிக் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க இந்தக் கடிதத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.  ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படித்து,  அதில் தனது முன்னாள் காதலி செய்திருந்த தவறுகளைச்  சிவப்பு மையால் திருத்தி அனுப்பியிருக்கிறார். முதல் பக்கத்தில் தேவையில்லாமல் மிகப்பெரிய துவக்கம் இருக்கிறது. அதைச் சுருக்கியிருக்கலாம். நிறைய இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது போன்ற கமென்ட்டுகளை அள்ளித்தெளித்து, தனது பிரேப் அப் வலிக்கு மருந்து போட்டுக்கொண்டார்.

மேலும், இலக்கணப்பிழைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சிவப்பு பேனாவால் திருத்தியுள்ளார்.  தனது ட்விட்டர் பக்கத்தில், திருத்திய கடிதத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். முதல் இரண்டு பக்கங்களில் சுமாரான தவறுகள் இருந்துள்ளதாகவும், மூன்றாவது பக்கத்தில் நிறையத் தவறு உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இறுதியாக, கடிதம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ள நிக் லட்ஸ் ''இது பெரிதாக உள்ளது. சொல்ல வந்த விஷயத்தில் ஆழமில்லை. மீண்டும் ஒருமுறை சரியாக முயற்சிசெய்யவும் என்று கூறி 100-க்கு 61 மதிப்பெண்கள்  என  டி க்ரேடு வழங்கியுள்ளார். 
நிக் லட்ஸ் தனது ட்விட்டர் பதிவில், உங்கள் முன்னாள் காதலி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால், அதனை இதுபோல திருத்தி திரும்ப அனுப்புங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இவரது ட்விட்டர் கணக்கிலிருந்து இந்தக் கடிதத்தை ஷேர் செய்துள்ளனர். இந்தக் கடிதம் ஆன்லைனில் வைரலாக, பலரும் தங்கள் கருத்துக்களை நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளனர். இவரது இந்த வித்தியாசமான பதிவு அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளது. பரவாயில்லை பாஸ், நல்ல மனுஷனா இருக்காப்ல 61 மார்க் போட்டிருக்காரு. கடுப்புல கம்மியா மார்க் போட்டு ஃபெயில் ஆக்காம இருந்துருக்காரேனு சிலாகிக்கின்றனர் சிலர். 

நிக் லட்ஸுக்கு அவரது முன்னாள் காதலி அனுப்பிய கடிதம்:

பக்கம் 1:

பக்கம் 2:

பக்கம் 3:

பக்கம் 4:

இதெல்லாம் சரியா ப்ரோ என்ற கேள்விக்கு “ அவ பல மாசமா என்னை ஏமாத்தியிருக்கா. நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸோட பேரை கோட் நேம்ல மொபைல்ல சேவ் பண்ணி, எனக்கு தண்ணி காட்டியிருக்கா ப்ரோ” என பதில் சொல்லியிருக்கிறார், நிக்.

கண்டங்கள் வேறு என்றாலும் காதல் பிரச்னை ஒன்றுதான்.

-ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்