Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்துக்குள் விமானம் பாய்ந்து விபத்து: 5 பேர் பலி

ஆஸ்திரேலியாவில், வணிக வளாகம் ஒன்றில் சிறு ரக விமானம் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மெல்போர்ன் நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேருடன் அந்த விமானம், எஸ்ஸன்டன் விமான  நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கட்டுப்பாட்டை இழந்து வணிக வளாகத்துக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Australia plane crashes into shoping mall

இதில் விமானத்தில் இருந்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக, பலி எண்ணிக்கை மேலும், அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் அந்த விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement