ரசிகையை இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்திய ரஷ்ய வீரர்!

Russian Hockey Champlain gave sweet shock to his fan

ரஷ்யாவின் பிரபல ஹாக்கி சாம்பியன், விளாடிமிர் டரசென்கோ. இவரது 11 வயது ரசிகை அரியானா டவுகான், தனது குழந்தைப் பருவத்தில் இருந்து எட்டு வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்றுவருகிறார்.  டரசென்கோ, தனது ஹாக்கி அணி சார்பாக சில வருடங்களுக்கு முன்னர், புற்றுநோய் சிகிச்சைபெற்றுவரும் குழந்தைகளிடம் உரையாற்றினார். அப்போது, தனது தீவிர ரசிகை டவுகானைச் சந்தித்துள்ளார். சமீபத்தில், தனது பதினோராவது பிறந்தநாளைக் கொண்டாடிய டவுகானுக்கு, பிறந்தநாள் பரிசாக ஹாக்கி ஜெர்சி ஒன்றையும் ரஷ்ய ஹாக்கி அணியினருடன் சுற்றுலா செல்ல டிக்கெட்டையும் வழங்கியுள்ளார் விளாடிமிர். அவரது இந்த நல் உள்ளத்துக்கு, ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துமழை பொழிந்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!