'இரண்டு கட்சிகளுக்கும் இடையில் விளையாட்டுப்பொருளாகிவிட்டேன்'- விஜய் மல்லையா

Vijay Mallya

பல வங்கிகளில்  9,000 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்தில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவைக் கைதுசெய்ய, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில்... மல்லையா, லண்டனில் நேற்று நடந்த  பார்முலா-1 கார்ப் பந்தயத்தில் காணப்பட்டார்.

அப்போது பேசிய அவர், 'தேர்தல் பிரசாரங்களில் என்னைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு மத்தியில், நான் விளையாட்டுப் பொருளாகிவிட்டேன் என்பது தெரிகிறது. எனக்கு எதிராக அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறதோ, அதைவைத்து அவர்கள் அணுகட்டும். சட்டம் அதன் கடமையைச் செய்யும். இங்கிலாந்துச் சட்டப்படி நான் பத்திரமாக உள்ளேன்' என்று கூறினார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!