ஆளில்லா விமானங்களை அழிக்க, கழுகுகளுக்குப் பயிற்சி! | Training for the eagles to destroy terrorist drones!

வெளியிடப்பட்ட நேரம்: 00:11 (24/02/2017)

கடைசி தொடர்பு:09:51 (24/02/2017)

ஆளில்லா விமானங்களை அழிக்க, கழுகுகளுக்குப் பயிற்சி!

தீவிரவாதிகள், வான்வழியாகவும் தாக்குதல்களை நடத்திவருகிறார்கள். அதற்காக அவர்கள், சிறிய வகை ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனை முறியடிக்க,  புதிய திட்டம் ஒன்றை பிரான்ஸ் நாடுஅறிமுகப்படுத்தி உள்ளது. வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களைப் (Drones) பிடிக்கும் பயிற்சியை கழுகுகளுக்கு பிரான்ஸ் விமானப்படை அதிகாரிகள் தற்போது அளித்துவருகிறார்கள்.


ட்ரோன்களில் உணவுகளை வைத்து, அதனைப் பிடிக்கச் சொல்லி கழுகுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. கழுகுகள்மூல செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், நல்ல பலன் தரும் என்று பிரான்ஸ் அரசு நம்புகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க