ஐரோப்பாவில், ஆட்டோமேட்டிக் கார்களுக்குக் கட்டுப்பாடு!

K government finally draws up laws for autonomous cars

ஐரோப்பாவில், ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் பிரபலமடைந்துவருகின்றன. எலெக்ட்ரானிக் சென்சார்கள் மூலமாக இயங்கும் இந்த வகை கார்களின் விலை, சராசரி கார்களைவிட சற்று கூடுதலானவை. சாலையில் பயன்படுத்த, சோதனை முயற்சியில் இன்னும் வெற்றிபெறாத இந்த கார்களால், அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. பொதுவாக, வாகன நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைகளில், இந்த கார்கள் ஆட்டோ டிரைவிங் மோடில் இயங்குகின்றன. இந்த கார் மூலமாக ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, ஐரோப்பிய அரசு புதிய காப்பீட்டுச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆட்டோ மோடில் கார் பயன்படுத்தப்படும்போது விபத்துகள் நேர்ந்தால், காரின் உரிமையாளர் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதற்குமுன், விபத்து நேர்ந்தால், கார் உரிமையாளர்கள் தொழில்நுட்பக் கோளாரைக் காரணம் காட்டி, நஷ்டஈடு வழங்காமல் தப்பித்துவந்தனர். புதிதாக இயற்றப் பட்ட சட்டத்தால், சரியான பாதையில் வந்து விபத்துக்குள்ளானவர்கள் பயன்பெறுவார்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!