அமெரிக்க விசா குளறுபடியால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!


9 வயதான அலெக்ஸ் குட்வின் என்னும் ஐரோப்பாவைச் சேர்ந்த சிறுவன், அரிதாக ஏற்படும் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். அவனது தந்தை கலை நிகழ்ச்சி நடத்தி அவனது மருத்துவச் செலவுக்குப் பணம் சேர்த்துள்ளார். சிறுவனின் பாதிக்கப்பட்ட கால் எலும்பு, அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக, டைட்டானியத்தால் ஆன செயற்கை எலும்பு பொறுத்தப்பட்டது. அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சைக்காக, அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் செல்ல சிறுவனின் தந்தை விசாவுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று, சிறுவன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தான். ட்ரம்பின் 90 நாள் தடை உத்தரவு காரணமாக, அமெரிக்க விசாவில் பல கெடுபிடிகள் இருந்தன. கடைசி கட்ட சிகிச்சை முடியும் முன்னர், விசா காலாவதி ஆகி விட்டது என அதிகாரிகள் சிறூவனின் தந்தையிடம் கூறி, ஐரோப்பா புறப்படுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் வேறு வழி இல்லாமல் அவர்கள் ஐரோப்பா திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!