இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசு வருத்தம்

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில், இந்தியாவைச் சேர்ந்த இன்ஜினீயர் ஶ்ரீனிவாஸ் மற்றும் அவரின் நண்பர் அலோக் மடாசனி, கடந்த புதனன்று துப்பாக்கியால் சுடப்பட்டனர். இந்தச் சம்பவத்தில், ஶ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலோக், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ட்ரம்ப்பின் ஊடகச் செயலாளர் ஷான் ஸ்பெசெர், இந்தச் சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர்களின்  உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று கூறினார்

எச்1பி விசா மற்றும் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர், நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்கா வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!