வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (28/02/2017)

கடைசி தொடர்பு:21:24 (28/02/2017)

506 டன் லக்கேஜுடன் பயணம் செய்யும் சவுதி அரசர்

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் 9 நாள் அரசு முறைப் பயணமாக இந்த வாரத்தில் இந்தோனேசியா செல்லவுள்ளார். அவருடைய பயணத்துக்காக மட்டும் 506 டன் எடைக்கு லக்கேஜ் கொண்டு செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த லக்கேஜில் இரண்டு எஸ்600 ரக பென்ஸ் கார்கள், மற்றும் இரண்டு லிப்ட் கொண்டு செல்கிறார். சவுதி மன்னரின் லக்கேஜ்களை கையாள்வதற்கு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில் லக்கேஜை கையாள்வதற்கு 572 ஊழியர்களை நியமித்துள்ளனர். சவுதி அரேபிய வரலாற்றில் அப்துல் அசிஸ் சுமார் 46 ஆண்டுகள் கழித்து, இந்தோனேசியாவுக்குச் செல்லும் முதல் மன்னர். சவுதி மன்னரின் இந்தோனேசியப் பயணத்தில், அவருடன் சேர்ந்து 10 அமைச்சர்கள், 25 இளவரசர்கள், 110 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 1,500 பேர் செல்லவுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க