வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (28/02/2017)

கடைசி தொடர்பு:20:19 (28/02/2017)

ஆஸ்கர் நாயகனுக்கு கை தட்டாத நாயகி.. காரணம் இது தான்!

ஆஸ்கர் 2017 விருது விழாவில் ’Manchester By The Sea’ படத்தின் நாயகன் கேசி அஃப்லெக் சிறந்த நடிகருக்கான விருது பெற்றபோது அரங்கே அதிரும்படி கைதட்டல் ஒலி எழுந்தது. ஆனால் அவருக்கு விருது வழங்கிய நடிகை ப்ரி லார்சன்  (Brie Larson) மட்டும் கை தட்டவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டு சக நடிகைகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கேசி மீது குற்றம்சாட்டப்பட்டதே லார்சன் கை தட்டாததற்கு காரணம். கேசி மீது பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் அவரை எப்படி ஆஸ்கர் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கலாம் என சர்ச்சை எழுந்தது. தற்போது அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கியதால் நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவருக்கு விருது வழங்கிய நடிகை பிரை லார்சன் கை தட்டாமல் அமைதியாக நின்றதை பலர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

Brie Larson

 ’Room’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ப்ரி லார்சன். இத்திரைப்படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாக நிற்கும் வக்கீலாக பிரை லார்சன் நடித்திருப்பார். இத்திரைப்படத்துக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட கேசி விருது பெற்றபோது கை தட்டாமல் அமைதியாக நின்று தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க