2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓப்ரா வின்ஃப்ரே? | Oprah Winfrey hints that she may contest in 2020 US President elections

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (02/03/2017)

கடைசி தொடர்பு:14:20 (02/03/2017)

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓப்ரா வின்ஃப்ரே?

oprah winfrey

அமெரிக்காவின் பிரபல டி.வி தொகுப்பாளினி ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey), எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவருக்குப் பலத்த எதிர்ப்பு நிலவி வந்தது. இருப்பினும், அவர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானார். தொடர்ந்து அவருக்கு எதிராகக் கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல டி.வி. தொகுப்பாளினி ஓப்ரா வின்ஃப்ரே, 'என்னிடம் அதிபர் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று முன்னர் கேட்கும்போது, நான் அதைப் பற்றி சிந்தத்தது கூட கிடையாது. ஏனென்றால், எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது, என் எண்ணம் மாறியுள்ளது' என்று கூறியுள்ளார்.

ஓப்ரா வின்ஃப்ரே, தொடர்ந்து 25 ஆண்டுகள் 'தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ' என்ற பிரபல டி.வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க