Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2050-ல் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இஸ்லாமியர்கள்!

2050-ம் ஆண்டில் உலகில் அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்காவின் 'Pew Research Centre' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது, இந்தோனேசியாதான் உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இருக்கிறது. மேலும், உலக மக்கள் தொகையில் 23% பேர் இஸ்லாமியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது 1.6 பில்லியன் இஸ்லாமியர்கள் உலகில் இருக்கிறார்கள். மக்கள் தொகையில் உலகில் தற்போது, கிறிஸ்துவத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள இஸ்லாம் மக்கள் தொகையில் வேகமாக வளர்ந்து வரும் மதம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Muslims

அதன்படி, 2050-ம் ஆண்டில் இந்தியாவில் 300 மில்லியன் இஸ்லாமியர்கள் இருப்பார்களாம். உலக அளவில் 2.8 பில்லியன்களாக இருப்பார்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பாவிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவில் தற்போது இருப்பதை விட, 2050-ம் ஆண்டில்  இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 10% அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement