Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு - அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மறுப்பு

அமெரிக்காவின் 45-வது அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்று அதிபரானார். அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப்பின் ஆதரவாளரான தற்போதைய அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், ரஷ்யாவின் புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை, ஜெப் செசன்ஸ் மறுத்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், 'ரஷ்யாவின் புலனாய்வுத்துறை அதிகாரிகளை நான் சந்திக்கவில்லை. ட்ரம்ப் பிரசாரம் குறித்து ரஷ்யாவின் புலனாய்வுத்துறை அதிகாரிகளை நான் சந்தித்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ரஷ்யத் தூதரிடம் நான் அரசியல்ரீதியாகப் பேசியதாக எனக்கு நினைவில்லை' என மறுத்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement