Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் வியாழன்று இரவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்னிஷ் பட்டேல் என்பவரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்னிஷ் பட்டேல் தெற்கு கரோலினாவில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் வியாழன்று இரவில் கடை முடிந்து வீடு திரும்பிய போது, அவரின் வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹர்னிஷ் தெற்கு கரோலினா பகுதியில் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் முக்கியமான நபராக இருந்து வந்துள்ளார். அவரது உடலில் வெளிப்படையான இரண்டு துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. ஒரு சில அடி தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று காவல்துறை விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22 ம் தேதி கான்சாஸ் நகரில் ஶ்ரீனிவாஸ் என்ற இந்தியரை, 'இந்தியனே இங்கிருந்து வெளியேறு' என்று கூறிக்கொண்டு அமெரிக்கர் ஒருவர் கொடுரமாக சுட்டுக் கொன்றார். அந்த இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இருப்பினும் இனவெறி காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதா, அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement