Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவுக்குள் நுழையும் மெக்ஸிகோவினரைத் தடுக்க சட்டத்திருத்தம்?

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே மெக்ஸிகோவில் இருந்து குடிபெயர்பவர்கள் பற்றி காட்டமாகப் பேசியிருந்தார் டொனால்ட் ட்ரம்ப். அதிபராகப் பதவியேற்றதும், அமெரிக்கா -மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கான ஆணையிலும் கையெழுத்திட்டார்.

3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தச் சுவர் கட்டப்படும் என்றும், சுவர் கட்டுவதற்கான செலவை மெக்ஸிகோ ஏற்கவேண்டும் என்றும் ட்ரம்ப் கூறிருந்தார். ஆனால், அதற்கு மெக்ஸிகோ அதிபர் பீனா நீட்டோ கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்பவர்களைத் தடுப்பதற்காக புதிய யுக்தியைக் கையாள அமெரிக்க அரசு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க எல்லைக்குள் குழந்தைகளோடு அத்துமீறி நுழையும் பெண்கள் கைதானால், பெண்களையும் குழந்தைகளையும் பிரித்து தனி இடங்களில் வைக்கும்படி சட்டத்தில் மாறுதல் கொண்டுவரப் போவதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

அமெரிக்க எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைதானால், சொந்த நாட்டுக்குத் திரும்பச் செல்லவோ அல்லது வழக்கு விசாரணை முடியும்வரை அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகவோ உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. உடனடியாக தஞ்சம் வழங்க அனுமதி வழங்கப்படாத அளவுக்கு இதில் மாறுதல் கொண்டுவர உள்நாட்டு பாதுகாப்புத் துறை உத்தேசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement