சோமாலியாவில் பஞ்சம், பட்டினி: இரண்டு நாளில் 110 பேர் மரணம்!

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவருகிறது. கடந்த  இரண்டு நாள்களில், தெற்கு சோமாலியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே செய்தி வெளியிட்டுள்ளார். சோமாலியா பஞ்சத்தால், இந்த ஆண்டு 2,70,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என, யூனிசெஃப் ஓர் ஆய்வில் கணித்தது.

Somaliya
 

இதுகுறித்து பிரதமர் ஹசன் அலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடும் பஞ்சம் நிலவும் சூழலில், ஒரே நேரத்தில் மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது சிரமமாக உள்ளது என்றார்.

மக்கள் பட்டினியாலும், வயிற்றுப்போக்கினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்குப் போராடி வரும் மக்களைக் காப்பாற்ற, சோமாலிய அரசு முழுவீச்சில் செயல்பட்டுவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!