ஈராக்கில், ஒரே வாரத்தில் 60 ஆயிரம் பேர் அகதிகள் ஆன பரிதாபம்!

ஈராக்கின் மேற்கு மொசூல் நகரிலிருந்து,  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் அகதிகளாய் வெளியேறி இருப்பதாக, ஈராக் அரசாங்க நிர்வாகி தெரிவித்துள்ளார். 2014 ஜூன் மாதத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈராக்கின் மொசூல் நகரத்தைக் கைப்பற்றியது. அது முதல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு மொசூல் முக்கியத் தளமாக இருந்துவருகிறது. 


மொசூல் நகரை மீட்கும் நோக்கில், ஈராக் அரசாங்க ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.  கடந்த இரண்டே நாட்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். மக்களுக்கு தங்க இடமும், உணவும்  ஈராக் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. தங்களுடைய அகதிகள் முகாமில் இன்னும் ஒரு லட்சம் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று அறிவித்துள்ளது ஈராக் அரசாங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!