வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (06/03/2017)

கடைசி தொடர்பு:09:46 (07/03/2017)

ஃபேஸ்புக்கில் முதன்முறையாக 'Dislike' ஆப்ஷன்..!

FB

வெகு நாட்களாக ஃபேஸ்புக் பயனர்கள் எதிர்பார்க்கும் அப்டேட் என்றால், அது 'Dislike' ஆப்ஷன்தான். ஃபேஸ்புக்கில் சமூக வலைதளங்களில் போடப்படும் ஒரு போஸ்ட்டுக்கு, 'டிஸ்லைக்' கொடுப்பதற்கான அப்டேட் வராதா என்று பலர் நினைத்திருக்கலாம். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இது தெரியாமல் இல்லை. எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று இதுவரை அதற்கான அப்டேட் கொடுக்காமல் இருந்தார்கள். தற்போது, 'மெஸஞ்சர்'  ஆப்பில் மட்டும் இந்த வசதியை அறிமுகம்செய்ய உள்ளது, ஃபேஸ்புக்.

உலக அளவில் கிட்டத்தட்ட 100 கோடி பேர் மெஸஞ்சர் பயன்படுத்துகிறார்கள். மெஸஞ்சரில் இந்த 'டிஸ்லைக்' அப்டேட் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து, ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் அந்த அப்டேட்டைக் கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்புதான், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்ட்டுக்கு, பல வகை 'எமோஜி' ரியாக்‌ஷன் கொடுக்கும் வண்ணம் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 'டிஸ்லைக்' ரியாக்‌ஷன் அப்டேட் கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது பற்றி ஃபேஸ்புக் நிறுவனம், 'நாங்கள் மெஸஞ்சரைப் பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க, பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் புது அப்டேட்டும் அதைப்போன்ற ஒன்றுதான்.' என்று தெரிவித்துள்ளது. 

விரைவில், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்டுக்கு, 'டிஸ்லைக்' கொடுக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க