மலேசிய அரசுக்கு வட கொரியா பதிலடி!

Malaysian ambassador

வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம் (Kim Jong Nam), மலேசியாவில் கொல்லப்பட்டார். இதனையடுத்து, மலேசியாவில் வடகொரிய மக்களுக்கு அனுமதித்திருந்த விசா இன்றி பயணம் செய்யும் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்தது. மேலும், இந்தக் கொலை சம்பந்தமாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வி.எக்ஸ் எனப்படும் ரசாயனத்தைப்  பயன்படுத்திதான் கிம் ஜோங் நம் கொல்லப்பட்டதாக மலேசிய தடயவியல் சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை, மலேசியாவில் இருந்த வடகொரியா தூதர் காங் சோல் விமர்சித்திருந்தார்.

மலேசிய அரசின் விசாரணையை விமர்சித்ததற்கு, வடகொரியா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, வடகொரியத் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பியது, மலேசிய அரசு. இதற்கு, வடகொரியா தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வராததையடுத்து, 48 மணி நேரத்துக்குள் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என வட கொரிய தூதர் காங் சோலுக்கு மலேசிய அரசு உத்தரவிட்டது. 

இதற்குப் பதிலடியாக வட கொரிய அரசும், அவர்கள் நாட்டில் இருக்கும் மலேசிய தூதர் நிசான் முகமதை (Nizan Mohamad), 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. ஆனால், அவர் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னரே மலேசியா புறப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!