வட கொரியாவைச் சமாளிக்க அமெரிக்கா நடவடிக்கை! | USA makes a move to counter North Korea

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (07/03/2017)

கடைசி தொடர்பு:10:53 (07/03/2017)

வட கொரியாவைச் சமாளிக்க அமெரிக்கா நடவடிக்கை!

USA and S.Korea

நேற்று, வட கொரியா நான்கு ஏவுகணைகளை ஜப்பான் நாட்டுக்கு அருகில் இருக்கும் கடலில் ஏவி சோதனை செய்தது. இந்தச் சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பல ஆசிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, ஏவுகணைத் தாக்குதலைச் சமாளிக்கும் வகையிலான உபகரணங்களைத் தென் கொரியா கொண்டுவந்துள்ளது அமெரிக்கா.  

வட கொரியா சோதனை நடத்திய பகுதி, பொருளாதார மண்டலம் என்று ஜப்பான் கூறியுள்ளது. அமெரிக்கா-தென் கொரியா இணைந்து செய்யும் ராணுவப் பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்த ஏவுகணைச் சோதனையை வட கொரியா நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது, வட கொரியாவின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க