வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (07/03/2017)

கடைசி தொடர்பு:10:59 (07/03/2017)

'மலேசியர்கள், நாட்டை விட்டுச் செல்ல தடை!'- வட கொரியா அதிரடி

malysia-N.Korea feud

வட கொரியாவின் அதிபர், கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் (Half-brother) கிம் ஜோங் நம், மலேசியாவில் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மலேசியா மற்றும் வட கொரியா அரசுகள் வெளியிட்டன. இதையொட்டி, மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வட கொரியா. மேலும், மலேசிய அரசும் வட கொரியத் தூதரக அலுவலகத்தில் வேலை செய்துவரும் அதிகாரிகளும் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜோங் நம் கொல்லப்பட்டது தொடர்பாக, மலேசிய அரசின் விசாரணையை விமர்சனம்செய்திருந்தார், மலேசியாவில் இருக்கும் வட கொரியத் தூதர். இதற்கு, மலேசிய அரசு, வட கொரியத் தூதர் மன்னிப்புக்  கோர வேண்டும் என்று தெரிவித்தது. வட கொரியத் தூதர் மன்னிப்புக் கோராததால், அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

வட கொரியாவும், மலேசியத் தூதரைத் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து இரு நாடுகளிடையேயான, பிரச்னை அதிகரித்துக்கொண்டேபோகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க