'துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை!'- மறுப்பு தெரிவிக்கும் இலங்கை | We did not shoot at Tamil fishermen, says Srilanka

வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (07/03/2017)

கடைசி தொடர்பு:15:14 (07/03/2017)

'துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை!'- மறுப்பு தெரிவிக்கும் இலங்கை

Lankan Navy personnel

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ மீது குண்டுபாய்ந்து உயிரிழந்தார். மேலும், அவருடன் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கைத் தரப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து, இலங்கைக் கடற்படையின் செய்தித்தொடர்பாளர், கேப்டன் சமிந்த வலகுலகே கூறுகையில், 'ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. இந்திய ஊடகங்கள் கூறுவது உண்மைத் தன்மை இல்லாத செய்தி. பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

-இரா.மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close