சிஐஏ பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ் #Vault7

'Vault 7' என்ற பெயரில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். CIA பற்றிய ரகசிய ஆவணங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் லீக்காவது இதுதான் முதல்முறை என்கிறது விக்கிலீக்ஸ். சிஐஏ-வின் ரகசிய ஹாக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 

Wikileaks Vault7

இந்த ஆவணங்களில், ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்ட், சாம்சங் டிவி-க்கள், விண்டோஸ் போன் போன்றவற்றை ஹாக் செய்து ரகசிய மைக்ரோபோனாகப் பயன்படுத்தும் அளவுக்கு சிஐஏ திட்டமிட்டிருந்தது விளக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி, ஃபேஸ்புக்கில் லைவ் பிரஸ் மீட் வைக்க ஜூலியன் அசாஞ்சே முயற்சித்தபோது, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!