காபூலில் ஐஎஸ் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி!

ஐஎஸ் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மூன்று தீவிரவாதிகள், மருத்துவர்களைப் போல உடை அணிந்துகொண்டு, மருத்துவமனைக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்துக்குப் பிறகே ஐஎஸ் இயக்கம் இதற்குப் பொறுப்பேற்றது.

தாக்குதல் நடத்திய பிறகும் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் இருந்தனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், மருத்துவமனைக்குள் நுழைந்த ராணுவம், தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!