வெளியிடப்பட்ட நேரம்: 03:48 (10/03/2017)

கடைசி தொடர்பு:13:01 (10/03/2017)

ஜெர்மனி ரயில் நிலையத்தில் ’கோடரி’ தாக்குதல்

கிழக்கு ஜெர்மனியிலிருக்கிறது டுசெல்டார்ஃப் என்ற நகரம். இதன் முக்கிய ரயில் நிலையத்தில் கோடரியைக் கொண்டு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார், எத்தனை பேர் சேர்ந்து இதைச் செய்தார்கள், எதற்காகச் செய்தார்கள் போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை ஜெர்மன் காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த ரயில் நிலையத்தையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் ஜெர்மன் காவல்துறையினர். இந்தச் சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க