யாழ்ப்பாணம் சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை!

fishermen

தமிழக மீனவர்கள் 53 பேர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 53 மீனவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கைச் சிறைகளில் மொத்தம் 85 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர், மீனவர் நலன் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - இலங்கை இரு நாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!